பரிசுத்த வேதாகமம்
Download

கர்த்தருக்குள் பிரியமானவர்களே,

அன்பின்வாழ்த்துக்கள்.

Smart phone வந்தநாளிலிருந்தே வேதாகமத்தை ஆன்லைனிலோ, ஆதன் மூவிலோ, போனிலோ, Tab லோ படிப்பதற்காக play store லிருந்து தமிழ் வெர்ஷன்கள் பலவற்றை Download செய்து படித்து வந்தாலும், ஏற்கனவே நம் கையில் வைத்துப் படித்துப்பழக்கப்பட்ட பைபிள் போல் இவைகள் இல்லையே என்ற ஒரு பெரிய குறை எப்போதும் இருந்து வந்தது. இதற்காகவே முழு தமிழ் பைபிளையும், பணம் செலவு செய்து Cam Scanner மூலம் scan செய்து Tab ல் பதிவேற்றம் செய்து படித்த நாட்களும் உண்டு.

அந்தக் குறையையும் தீர்ப்பதற்காக சில வருடங்கள் முன்பு வெளிவந்ததே இந்தத் தமிழ் இ-பைபிள். நாமக்கல் பாஸ்டர் வில்சன் அவர்களின் ஐந்தாண்டு இடைவிடாத கடும் முயற்சியினால் வெளிவந்த பைபிள் இது. நாம் காலங்காலமாக உபயோகித்து வரும் தமிழ் பைபிள் போன்ற தோற்றத்துடன் ஒரே பக்கத்தில் இரண்டு பகுதிகளைக் கொண்டது. இதைப்படிக்க  Pocket Book Reader செயலியை download செய்து கொண்டால் பேப்பர் பக்கங்களைப் புரட்டுவதுபோல flip செய்து படிக்கும் உணர்வுடன் படிக்க மிக அருமையாக இருக்கும். போதகர் அவர்களது இந்த மலையாய முயற்சிக்காகத் தமிழ்க்கிறிஸ்தவ உலகம் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறது. கர்த்தர் அருமைப்போதகர் வில்சன் அவர்களையும் குடும்பம் மற்றும் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக ! அவர்களை உங்கள் ஜெபங்களில் நினைத்துக் கொள்ளுங்கள்.

பரிசுத்த வேதாகமம்
Download