அரசனைக் காணாமல் இருப்போமோ.....
வேதநாயகர் ஜா. சே (1868 - 1932) அருள்திரு ஜி. எஸ். வேதநாயகர்
மதுரைக்கு அருகில் உள்ள தேத்தாம்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர். இளம் பருவத்தில்
இயேசுவை ஏற்றுக் கொண்டவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். இதழ் ஒன்றையும்
நடத்தி வந்தார். தொடக்கத்தில் மதுரைப் பகுதிகளில் பணிபுரிந்த வேதநாயகர் சென்னை
வந்து சூளை மேட்டிலுள்ள அந்திரேயா ஆலயத்தில் ஆயராகப் பணிபுரிந்தார்.
அருள்திரு வேதநாயகர் அரிய கிறித்தவ
இலக்கியங்களைத் தமிழுக்குத் தந்துள்ளார்.
அவை
- அமலகுரு சதகம்,
- சற்குரு சதகம்(1912),
- நெஞ்சுருவுகட்கம் ஆகிய நூல்களை இவர்
இயற்றியுள்ளார்.
இவர் மாதர் கும்மி, ஆடவர் கும்மி ஆகிய
நூல்களையும் எழுதியுள்ளார். படகோட்டிப் பாட்டு ஏற்றப் பாட்டு முதலிய நாட்டுப்புற
பாடல் வடிவங்களிலும் இவர் பாடல்கள் புனைந்துள்ளார். வேதநாயகரின் பாடல்கள் பல
கீர்த்தனைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
அவற்றுள் சில பாடல்களின் முதலடிகள் பின்வருமாறு:
- அரசனைக் காணாமல் இருப்போமோ
- உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய
- ஐயா உமது சித்தம் ஆகிடவே வேணும்
- சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா
வேதநாயகர் சிறந்த அருட் பணியாளர்.
அதில் இவர் அடைந்த இன்னல்கள் பல; திருப்பணியை உறுதியுடன் ஆற்ற இயலாத தம்முடைய நிலையை
நினைத்து உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய எனத் தொடங்கிப் பாடினார்.
அந்தப் பாடலின் ஒரு சரணம்:
வண்டி வகைகளோடு வாழ்ந்தும் எனது கூடு
மயங்கி அயர்ந்து வாடுதே - இனி
என்று மிருப்பிடத்திலிருந்து பணிபுரிய
இசைந்தென் மனது நாடுதே
ஒன்றும் உதவியின்று ஊரே அலைந்து சென்று
நன்றே நிதம் புரிந்த நாரனே பரனே யேசு -
உன்
0 Comments