அரசனைக் காணாமலிருப்போமோ.....

 

அரசனைக் காணாமலிருப்போமோ ? - நமது

ஆயுளை வீணாகக் கழிப்போமோ ?

பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ ? - யூதர்

பாடனு பாவங்களை ஒழிப்போமோ ? - யூத

 

யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே , - இஸ்ரேல்

ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,

ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்

தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கிமே ! - யூத – அர

 

அருள்திரு. ஜார்ஜ் சே. வேதநாயகம் ( 1868 1932 ) மதுரை தோத்தம்பட்டி கிராமம் சோலைமலை - கருப்பாயி தம்பதியின் மகன் நாகையா இவர்.  முன்னோர் அரசரின் பாதுகாவலர் என்பதால் சேர்வைக்காரர் எனப்பட்டனர்.  வாஷ்பான் போதகர் வளர்ப்பில் 12 வயதில் கிறிஸ்தவராகி இப்பெயர் பெற்றார். சாண்டரின் வளர்ப்பு மகளை மணந்து, இருவரும் அஞ்ஞானத்திலிருந்து விடுபட்ட அனாதைகள் என இருவரும் சேர்ந்து பாடி நற்செய்தி கூறுவர். 1930இல் மனைவி மரித்தார்.

சென்னையில் பணியாற்றியவர், சபை மூப்பர்களால் துன்பப்பட்டவர். பொய் வழக்குகளால் புண்பட்டவர். அரக்கோணத்தில் இவர் வீட்டை கொள்ளையடித்து வண்டி மாட்டைக் கொன்று இவரின் சபை சந்திப்புகளை தடை செய்தனர். கொலை செய்வார்கள் என பயந்து இடமாற்றம் கேட்டு பெற்றார். இச்சூழ்நிலையில் நொந்தழுது இப்பாட்டை மனைவியிடம் கொடுத்து ஜெபிக்கச் செய்தார்.

தன் பேரன் இம்மானுவேல் எபினேசர் சென்னை, கல்கத்தா பேராலயங்களின் ஆயர். மெட்ரிகுலேஷன் முடித்து 3 வருட இறையியல் கற்று சென்னை சூளை அந்திரேயாவில் 25 ஆண்டுகள் போதகர். 11 நூற்கள், 383 பாடல்கள், 13 CLS - இல் உள. சபையில் துன்பம், பொய் வழக்குகள், வீடு, மாடு கொள்ளை, கொலை மிரட்டல், அடிக்கடி இடமாற்றம் ஆகியவற்றால் துன்புற்றவர். அமெரிக்கன் மிஷன் ஊழியர், உபதேசி, போதகர், முனிஷி, பத்ராததிபர், ஆசிரியர், கீர்த்தனைக் கவிஞர். இக்குறிப்புகள் திருப்பத்தூர் சவரிராயனார் மூலம் பெறப்பட்டது.

 

பாடற்குறிப்பு

அரசன் என இயேசுவை முக்கியப்படுத்தி, பெத்தலையில் பிறந்தவரை காணாது நாட்களைக் கழிப்பதா. (பரம்பரை ஞானம்) யூதர் எதிர்பார்த்த மேசியாவின் வருகை, அதுவரை இஸ்ரவேலர் அனுபவித்த துயரங்கள் எனும் (ஞானம்) உணர்வை மேசியாவாகிய அரசன் யாக்கோபில் ஓர் வெள்ளி உதிக்கும், பீலேயாம் தீர்க்கன் மோவாபியனாகிய பாலாக் அரசனுக்கு உரைத்தது நிறைவேறிற்று (எண் 24:17). (ஆக்கமிழந்து என் வீடு நிறைய பொன்னும் வெள்ளியும் கொடுத்தாலும் எதிராய் வாக்களியேன் (எண் 24:12) என்றும், (பாக்கியமே) கிறிஸ்து பிறந்தது என்கிறார். ஏனைய சரணங்களில் காணிக்கைகளுடன் நட்சத்திரம் காட்டியபடி தொழுவத்தில் அரசனைக் கண்டார்கள்.