ஆ ! அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார்


ஆ ! அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார்

ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் பிறந்தார்.

     1. அன்பான பரனே ! அருள் மேவுங் காரணனே-

    நவ அச்சய சச்சித - ரட்சகனாகிய உச்சிதவரனே!

     2. விண்ணுடு தோண, - மன்னவர் பேண,

    ஏரோது, மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட விந்தையாய்ப் பிறந்தார்.


பாடற்குறிப்பு

(ஆ) ஆச்சரியம்

(அம்பர) உலகம்

(உம்பரம்) வானுலகமும் புகழ்த்தேத்தும்

(ஆதிபன்) கடவுள் பிறந்தார்

(அ + மலன்) பாவமில்லா – தூய

(ஆதிபன்) அரசர் பிறந்தார் அன்பின் கடவுளே

(நவ) புதிய

(அச்சய) தேவ குழந்தை

(சச்சிது அழகிய மீட்பராம் உச்சிது உயர்ந்த வரனே) மணவாளனே!

(விண்ணூடு வானில் நட்சத்திரம் தோன்ற (மத் 2 : 2) சாஸ்திரிகள் விரும்பி வணங்கினாலும், ஏரோது (மைந்தனின்) அற்கெலாயு (மத். 2:22) சிந்தை (அழுத்தி மிகவும் குழம்பி வேதனைப்பட்டான்

 

ஆசிரியர் குறிப்பு

உபதேசியார் யோவான் யாக்கோபு (1826 - 1885) கரூரில் பிறந்தவர். 8ஆம் வகுப்பு முடித்து ஈரோட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்று, பங்காருபாளயத்தில் இறையியல் பயின்றவர். இங்கிலாந்து மிஷனரி டாட்மேனடன் பணியாற்றி ஆங்கிலத்தில் தேர்ந்தார். ஆசிரியப் பணியைத் துறந்து திருப்பணியாற்றினார். கடலூர் பிராமண பெண்ணை மணந்தார். சொந்த வீடில்லாது வாழ்ந்தார். வித்வான் சௌடையிரிடம் சங்கீதத்தில் தேறி, வயலினை முதுகிலும், தலையிலும், காலிடக்கிலும் வைத்து வாசிப்பார். செருப்பு அணியாது, மாட்டுவண்டி, பழைய சைக்கிளில், நடந்தும் நற்செய்திப் பணியாற்றினார். சேலம் நாலு ரோடு கல்லறையில் உறங்குகிறார்.