கிறிஸ்மஸ் நாள் வரலாறு
உண்மையான கிறிஸ்மஸ்
கிறிஸ்மஸ் என்ற வார்த்தை கிறஸ்தவர்களின் கூடுகை - Mass of Christ (Christ-Mass) என்ற வார்த்தையிலிருந்து மருவி வந்ததாகும். இயேசு இந்த நாளில் தான் பிறந்தார் என்று யாராலும் சொல்ல முடியாது. தேவன் வேதத்தில் அதை வெளிப்படுத்தவில்லை. பின்னே ஏன் டிசம்பர்-25 ஐ நாம் இயேசு பிறந்த தினமாக கொண்டாடுகின்றோம். இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, ஆதி திருச்சபையின் வேதனைக் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்த ரோம மன்னரான கான்ஸ்டன்டைன் தான் முதலாவது கிறிஸ்மஸ் பண்டிகையைக் கி.பி 336-ல் கொண்டாடினார். பாகால் தேவதையான *சூரிய தேவதை*யின் பண்டிகையை டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடுவதை நிறுத்தி விட்டு பின்னர் அதே தினத்தில் இயேசு பிறப்பைக் கொண்டாடி தான் கிறிஸ்துவின் மீது வைத்திருந்த பற்றை வெளிப்படுத்தினார்.
முன்னூறு வருடங்களுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவம், இந்த மன்னனின் தீவிர பற்றினால் விடுதலை பெற்றது. மன்னனே இயேசுவை ஏற்றுக்கொண்டதால், அநேக ரோமர்களும், கிரேக்கர்களும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். கான்ஸ்டன்டைன் மறைவுக்கு பின்னர், புதிதாக சேர்ந்த கிறிஸ்தவர்கள், டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படும் பாகால் தேவதையான *சூரிய தேவதை*யின் பண்டிகையையில் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். ரோமில் உள்ள தலைமை சபை இதை எப்படியாவது இதைத் தடுக்க வேண்டுமென நினைத்தது. போப் ஜூலியஸ்-1 என்பவர் டிசம்பர்-25 ஐ, *கிறிஸ்து* பிறந்த தேதியாக அதிகார பூர்வமாக அறிவித்தார். அன்றுமுதல் இன்றுவரை இதைதான் நாம் கடைப்பிடித்து வருகிறோம். இன்று நாம் உபயோகப் படுத்தும் கிறிஸ்மஸ் மரம் கூட பாகால் தேவதையின் வழிப்பாட்டு முறையிலிருந்து வந்ததே! இதை கேட்கும் பொழுது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது அல்லவா.
அப்படியென்றால் நாம் கிறிஸ்மஸ் கொண்டாடக் கூடாதா? என்ற கேள்வி உங்களுக்குள் எழும்புகின்றது அல்லவா. வேதம் நாட்களை விஷேசமாக மாற்றிக்கொள்ளும் அதிகாரத்தை மக்களுக்கு கொடுத்திருகின்றது. *அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். நாட்களை விசேஷித்துக் கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளாதிருக்கிறான்* ரோமர் 14:5-6.
ரோம மன்னரான கான்ஸ்டன்டைன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட்டியதின் நோக்கம், பாகால் தேவதையான சூரிய தேவதை தெய்வம் அல்ல. இயேசு கிறிஸ்த்துவ மெய்யான தெய்வம் என்று அறிவிக்கவே. நான் சென்றவாரம் சென்றிருந்த கிராமத்தில் அநேக கிறிஸ்துவ விசுவாசிகள் வீடுகளுக்கு வெள்ளை பூசி, மாட்டு சாணத்தை வைத்து தரை மற்றும் திண்ணையை மொழுகிக் கொண்டிருந்தார்கள். நான் வசிக்கும் பெங்களூர் பட்டணத்தில், விலை உயர்ந்த ஆடைகளை வாங்குவதில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர்.
டிசம்பர் மாதம் என்றால், இயேசு பாவிகளை இரட்சிக்க மண்ணில் உதித்தார் என்ற நற்செய்தியை அநேகருக்கு அறிவிக்க வேண்டிய மாதம். அதைதான் கான்ஸ்டன்டைன் செய்தார். ஆனால் இன்றைய திருச்சபை மக்கள், தங்கள் வீடு வெள்ளையடிக்கப்பட வேண்டுமென்பதற்காகவும், தாங்கள் புது ஆடை அணித்து நல்ல உணவுகளை சாபிடுவதற்க்காகவும் கிறிஸ்மஸ் தினத்தை பயன்படுத்துகின்றாகள்.
இந்த டிசம்பர் மாதம் நற்செய்தியை தைரியத்தோடு அறிவிக்க வேண்டிய மாதம். மற்ற மாதங்களில் ஒலிப்பெருக்கி வைக்க காவல் துறையிடம் அனுமதி கேட்க்க வேண்டும். ஆனால் டிசம்பர் மாதத்தில் அனுமதியின்றி ஒலிப்ப்பெருக்கி பயன்படுத்தல்லாம். யாருக்கு வேண்டுமானாலும் இயேசுவின் பிறப்பின் செய்தியை அறிவிக்கலாம். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் மற்றும் உங்களுக்கு தெரிந்த கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிராத உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் கிரீடிங் கார்டில் நற்செய்யை அறிவிக்கலாம். *மனந்திரும்புகிற ஒரே பாவி யினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்* (லூக். 15:7). இயேசு பிறப்பின் செய்தியை பிறருக்கு அறிவித்து, ஏழை மக்களுக்கு உதவி, பின்னர் புத்தாடை அணிந்து, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதே உண்மையான கிறிஸ்மஸ்.

0 Comments