ஆண்டவர் பிறந்தனர் அல்லேலூயா - பத்தி ராசனம் துறந்தனர், அல்லேலூயா

 

    ஆண்டவர் பிறந்தனர் அல்லேலூயா - பத்தி

    ராசனம் துறந்தனர், அல்லேலூயா !

 

    தீண்டல கையின்விடம் பூண்டிடு நரரவர்

    மீண்டிட சிலுவையில் மாண்டிட புதவிதனில் -

 

    தாவீதினூர் மாட்டுக் கொட்டகையில் - அந்த

    சங்கீத வித்துவானின் வட்டகையில்,

    மாவேத முத்தாக - மங்காத சித்தாக

    சுவாதீன சொத்தாக - இஸ்திரியின் வித்தாக!

 

ஆசிரியர் குறிப்பு:

அருள்திரு சி.பி. ஞானமணி (1868-1922) திருச்செந்தூர், செல்வந்தர் வச்சிரமணி கிறிஸ்தியன் அவர்களின் முதல் மகன். மூதலூர், நீலகிரி, குன்னூர், தூத்துக்குடி, செங்கந்தராபாத், சென்னை வெப்பேரி, மைலாபூர், திருச்சி ஆகிய இடங்களில் திருப்பணியாற்றி 22.10.1922ல் மரித்தார். இவரின் 42 கீர்த்தனைகளில் 14 CLS - இல் உள்ளது. தமிழிலக்கண நூலாசிரியர் இசை வல்லுனர், இலக்கியப் புலவர், பாகவதர், தமிழிலக்கிய இலக்கண மேதை. இவரின் இலக்கண நூற்களிரண்டும் 1895ல் அரசு பாடநூலாக்கியது. இவரின் கவிதைகள் ஜெபகுரன்மலை, சிலுவைப் பாடுகள், டம்பாச்சாரியில், மரக்கலமுனிவர், மச்சமுனிவர், நல்லதாய், நிர்விசாரி, புத்துயிர் பெற்ற புத்திரி, கீர்த்தனைகள் ஆக 216 கீர்த்தனைகளை யாப்பிலக்கணத்தோடும் இசை நுணுக்கத்துடனும் படைத்துள்ளார்.

 

பாடற்குறிப்பு:

கிறிஸ்து பிறப்பின் பாடலில் கவித்திறனும், திருமறைத் தெளிவும் காணலாம்.

(ஆண்டவர் கடவுள் பிறந்தனர் என மதிப்புடன் அல்லேலூயா (சங் 150) தேவதேவனுக்கு லூயா) ஸ்தோத்திரம்.

(பத்ராசனம்) இராசாவின் இருக்கை

(துறந்தார் இழந்ததற்கு லூயா. தீண்டிய தொட்ட

(அலகை) பிசாசின்

(விடம்) பாவம்

(பூண்டிட) அடைந்த

(நரர்) மாந்தர்

(மீண்டிட) காப்பாற்றப்படுவதற்கு சிலுவையில் மாண்டிட பிறந்தார் என்கிறார். இச்சரணத்தில் தாவீதின் ஊர் மாட்டு கொட்டகையில்

(சங்கீத வித்துவானி) தாவீதரசனின்

(வட்டகையில்) ஊரில் பெரும் வேத விளம்பியாக (மங்காதி குறைவற்ற

(சித்தாக) ஞானமாக,

(சுவாதீன) சுதந்திர - சொத்தாக கன்னியின்

(வித்தாக) பிள்ளையாகப் பிறந்தார் அல்லேலூயா என்கிறார்.