இத்தரையின் மத்தியில் பெத்தலையில் சத்திரம் - இத்தயா
இத்தரையின் மத்தியில் பெத்தலையில் சத்திரம் - இத்தயா
அத்தனேசு புத்திரன் கிறிஸ்துவுமுதிதனர் - இத்
உன்னதம் மானம் மண்சமாதானம்
மன்பதை மேற்பிரியம் மன்னற்காக வின் - பாட
ஆசிரியர் குறிப்பு:
செந்தமிழ் ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்
(1902 - 1981) 7.2.1902ல் சங்கரன்கோயிலில் பிறந்தார். 5 வயதில் பெற்றோரையிழந்து
ஆம்பூரில் தன் அக்கா வீட்டில் வளர்ந்து பால் துரையவர்களால் பாளையங்கோட்டையில்
உயர்நிலைப் பள்ளி கல்வியை முடித்து 17 வயதில் ஆசிரியரானார். 22 வயதில் தமிழ்ப்
பண்டிதரானார். ஆம்பூர், பெரம்பூர், திருவல்லிக்கேணி, கெல்லட், தாம்பரம்
கிறிஸ்துவின் கல்லூரியில் தமிழாசிரியப் பணியாற்றி 24 வயதில் புலவராகி, பின்
பி.ஓ.எல். முடித்து மன்னார்குடி கல்லூரியில் 6 ஆண்டுகள் பணியாற்றிய போது இசை மேதை
இராசகோபாலரிடம் இசை பயின்றார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்
தமிழ்ப் பேராசிரியரானார். 1940இல் ஒப்பியன் மொழி நூலும், வேர்ச்சொல் சுவடி என பல
நூற்களை எழுதினார்.
50 வயதில் முதுகலைப் பட்டம் பெற்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் திராவிட மொழி ஆய்வுத்துறை பேராசிரியரானார். பல பட்டங்களைப் பெற்ற இவர் 305 பாடல்களை இயற்றியுள்ளார். மதுரையில் 1981இல் மரித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் பண்ணப்பட்டார். தமிழ்நாடு அரசின் மைய நூலகம் இவர் பெயரில் உள்ளதே இவரின் சிறப்பு.
பாடற்குறிப்பு:
கிறிஸ்து பிறப்பினை திருமறை
ஆதரங்களுடன் பாடுகிறார். தம் தமிழாழத்தின் யாப்பினை எழுத்து, சொல் முதலியவற்றால்
விளக்குகிறார். பல்லவி, அனுபல்லவியின் 8 சொற்களிலும் தகரத்தை முற்றெதுகைத் தொடையாக
அமைத்துள்ளார். (அத்தனின்) தேவனின் (ஏகபுத்திரன்) ஒரே குமாரனை பூமியில் பிறந்தபோது
நடந்த நிகழ்வினைப் பாடுவதிப்பாடல்.
0 Comments