தென் இந்தியத் திருச்சபை வரலாறு

HISTORY OF CHURCH OF SOUTH INDIA

19ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த ஆங்கிலிக்கன், காங்கிரிக்கேஷனல், பிரஸ்பித்திரியன், மெதடிஸ்ட் சபைகள் இந்திய விடுதலைக்குப் பின் ஒன்றிணைந்து தென் இந்திய திருச்சபை உருவாகியது.

 

(ஆங்கிலிக்கன் திருச்சபை - பேராயர் ஆளுகையை ஏற்றது. இங்கு பேராயருக்குத்தான் அனைத்து அதிகாரமும் உண்டு.

காங்கிரிகேஷனல் திருச்சபை -  சபை ஆளுகை முறையை ஏற்றது. இங்கு சபையாருக்குத்தான் அனைத்து அதிகாரமும் உண்டு).

 

1). ஆங்கிலிக்கன்: சி.எம்.எஸ் Church  Missionary Society - எஸ்.பி.ஜி - Society for the Propagation of Gospel - ஆகிய சபைகள்

இவை இங்கிலாந்து ஆங்கிலிக்கன் சபைகளுடன் தொடர்புடையவை.

 

2). காங்கிரிகேஷனல்: எல்.எம்.எஸ் - London Missionary Society - American Board of Commissioners  of Foreign Mission ( ABCFM ).

 

3). பிரஸ்பித்திரியன்: ஸ்காட்லாந்து சபை, - Presbyterian Scotland Church - Dutch Reformed Church in America.

 

4). மெதடிஸ்ட் சபை - Methodist Church -  இங்கிலாந்து மெதடிஸ்ட் சபை.

 

மேலே குறிப்பிட்ட சபைகளின் திருச்சபைகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தன.

19 ஆம் நூற்றாண்டில் தீவிரமடைந்த தேசிய விடுதலை இயக்கத்துடன் இந்தியத் திருச்சபைகளிலும் சுயசார்பு அவசியம் என்று உணரப்பட்டது. மேலும் அனைத்துத் திருச்சபைப் பிரிவுகளும் மேலைநாட்டுப் பிரிவுகளாகவே இருந்தனவே தவிர, இந்தியத் திருச்சபை அமைப்பு இல்லாமல் இருந்தது. ஆகவே ஒரே ஐக்கியத் திருச்சபைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

1901 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தென் இந்தியாவில் இருந்த தென் இந்திய பிரஸ்பித்திரியன் திருச்சபை ஸ்காட்லாந்து ஐக்கியத் திருச்சபை, அமெரிக்கன் ஆற்காடு மிஷன், பேசல் மிஷன் - Basel Mission - ஆகிய சபைகள் இணைந்து ஒரு கூட்டிணைப்பு (Federal Union) உருவாகினர்.

1904 ஆம் ஆண்டு எல்.எம்.எஸ். காங்கிரிகேஷனல் சபைகள் (தென் இந்தியாவிலும் யாழ்பானத்திலும் இருந்த சபைகள்) ஆகியவைகளும் இணைந்து பிரிதொரு கூட்டிணைப்பு உருவாக்கினர். 1908 ஆம் ஆண்டு மேற்குறிப்பிட்ட பிரஸ்பித்திரியன் சபைகளும் காங்கிரிகேஷனல் சபைகளும் இணைந்து தென் இந்திய ஐக்கிய திருச்சபை அமைப்பை (South India United Church - SIUC) உருவாக்கினர்.

(In 1904 , the Congregational Church's of the London Missionary Society in South India and the Congregational Churches of the American Board Mission in South India and Jaffna came together in Federal Union . In 1908 , these two bodies , the Presbyterian and Congregational came together to form South India United Church  ( SIUC ).

1910 இல் எடின்பரோவில் நடைபெற்ற அனைத்துலக அருள்பணியர் மாநாட்டில் -International Missionaries Conferences, Edinburgh-  ஒற்றுமைக்கான மிகப் பெரிய முயற்சி எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து "தேசிய அருள்பணியர் மன்றம்" (National Missionary Council) 1914 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அது "தேசிய கிறிஸ்தவ திருச்சபைகள் மன்றம்" - National Christian Council of Churches - ஆகியது.  இதைத் தொடர்ந்து பல கூட்டங்கள் வட்டார அளவில் நடைபெற்றன. அதில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் "ஒரே நற்செய்தியை அறிவிக்கிற நாம், இவ்வாறு பல சபைப் பிரிவுகளாகப் பிரிந்திருக்க வேண்டுமா? என்று உணரப்பட்டது.

 

அதன் விளைவாக லுத்தரன், மெதடிஸ்ட், தெ.இ.ஐ.தி. ஆங்கிலிக்கன் ஆகிய சபைகளின் ஆயர்கள் அருள்திரு வே.சா. அசரியா, அருள்திரு. வே. சந்தியாகு ஆகியோர் தலைமையில் தரங்கம்பாடியில் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது. அதில் பல தீர்மானங்கள் தீர்மானிக்கப்பட்டு அவை "தரங்கம்பாடி அறிக்கை" - Tranquebar Manifesto - என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ந்த கூட்டங்களில் லுத்தரன் திருச்சபை விலகிக் கொண்டது. மற்ற ஆங்கிலிக்கன், மெதடிஸ்ட், தெ.இ.ஐ.தி ஆகியவை இணைந்து 1920 ஆம் ஆண்டு ஒரு கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில்:

1). திருமறை மட்டுமே நமது நம்பிக்கை, நிலைப்பாட்டிற்கான உன்னதமான ஆதாரம் ஆகும்.

2). நமது பற்றுறுதி அறிக்கைக்கும் விசுவாச வாழ்வுக்கும் அப்போஸ்தலர் பற்றுறுதி அறிக்கையும், நிசேயா பற்றுறுதி அறிக்கையும் அடித்தளமாகும்.

3). திருமுழுக்கு, திருவிருந்து ஆகிய திருவருள்சாதனங்களை ஏற்கிறோம்.

4). பேராயர் ஆளுகை முறையுடன் கூடிய அருள்பொழிவு திருப்பணியை ஏற்கிறோம்.

என்று தீர்மானிக்கப்படன.

இதில் முதல் மூன்று தீர்மானங்களும் முரண்பாடுகள் இல்லாமல் ஏற்கப்பட்டன. ஆனால் நான்காவது தீர்மானம் விவாத்த்திற்குரியது ஆகியது. ஆங்கிலிக்கன் திருச்சபை மட்டும் பேராயர் ஆளுகையை ஏற்று அருள்பொழிவு செய்திருந்தது. மற்ற திருச்சபைகள் அவ்வாறு அருள்பொழிவு செய்யவில்லை. இறுதியில் அனைவரும் பேராயர் ஆளுகை முறைப்படி திருநிலைப்படுத்தப்படுவதை ஏற்றனர்.

இந்த ஐக்கியம் உருவாக 20 ஆண்டுகள் கடந்தன.தொடர்ந்து பல திருச்சபைகள் இத்தீர்மானங்கள் குறித்து அவர்கள் திருச்சபை அளவில் விவாதித்தனர். 1941 ஆம் ஆண்டு மெதடிஸ்ட் திருச்சபை மேற்கூறிய தீர்மானங்களை ஏற்று வாக்களித்தது. 1945 ஆம் ஆண்டு General Council of Church of India, Burma and Ceylon (the Anglican Church) gave their consent. 1946 ஆம் ஆண்டு தெ.இ.ஐ.தி. இத்தீர்மானங்களை ஏற்றது. இறுதியில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி "தென் இந்தியத் திருச்சபை "என்ற பெயருடன் தென் இந்தியத் திருச்சபை உருவாகியது.