அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் (O Love, that wilt not let me go)
அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் (0 love that
wilt not let me go) என்ற பாட்டை எழுதியவர் டாக்டர் ஜார்ஜ் மாதீசன் (Dr. George
Matheson) என்பவர்ருக்குத் திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
தனக்கு நியமிக்கப்பட்டிருந்த பெண்ணை இவர் மிகவும் நேசித்தார். ஆகையால் கலியாண தினத்தை மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் ஜார்ஜ் மாதீசனுக்குக் கண்ணில் ஊனம் ஏற்பட்டு, கண்பார்வை இல்லாமலிருந் கண்பார்வையற்றவராய் இருந்த விஷயத்தை தனக்கு நியமித்திருந்த பெண்ணிடம் தெரிவித்தாராம். தெரிவிக்காமலிருக்கக் கூடாதல்லவா ? தன்னை மணக்கப் போகிறவருக்குக் கண்பார்வையில்லை என்பதைக் கேள்விப்பட்டதும்
, அந்தப் பெண் அவரைக் கலியாணம் செய்து கொள்ளமறுத்து விட்டாளாம்.
ஜார்ஜ் மாதீசனுக்கு வேதனை தாங்க முடியவில்லை.
அச்சமயத்தில் அவர் தேவனுடைய அன்பைப்பற்றித் தியானிக்க ஆரம்பித்தார்.
ஒரு குறையைக் கண்டதும் வேண்டாமென்று வெறுத்துத் தள்ளும் அன்பும் அன்பா? எவ்வளவு குறைகள் இருந்தாலும் விடாமல் பின் தொடர்ந்து கொண்டேவரும் அன்பல்லவா அன்பு ! அது தான் தெய்வீக அன்பு என்று சிந்தித்துக் கொண்டிருக்கை யில் தான் O Love that wilt not let me go என்ற பாட்டு அவருடைய உள்ளத்தில் உருவாகிற்று.
O Love that
wilt not let me go I rest my weary soul in thee இப்பாட்டு உருவான சந்தர்ப்பத்தை பற்றி வேறு விதமாகவும் கூறுவர்.
பிரசங்கத் திறமையும்,
சங்கீத ஞானமும் பெற்ற டாக்டர் ஜார்ஜ் மாதீசனுக்கு இளம் வயதிலேயே ஊனம் ஏற்பட்டு, தமது பதினெட்டாம் வயதிலே கண் பார்வையை முற்றிலும் இழந்து விட்டார். தான் சேவை செய்த இன்னலான் (Innellan) என்ற சேகரத்தில் இருக்கும் போது இப்பாட்டை தமது 40 வயதில் எழுதினாராம்.
தன் வீட்டுக் காரியங்களை நடத்தி வந்த தனது சகோதரியின் கலியாண தினத்தன்று,
வேறு எவர்க்கும் தெரிவிக்கக் கூடாத ஒரு மன வேதனையில் அகப்பட்டுக் கொண்டாராம்.
வேதனையின் மத்தியில் இயேசுவின் அன்பைத் தியானித்த பொழுது இந்தப்பாட்டு அவர் மனதில் தோன்றிற்று என்பர் சிலர்.
ஐந்து நிமிஷங்களுக்குள் இப்பாட்டை அமைத்ததாக மாதீசன் கூறுகிறார்.
கருத்துக்கள் யாவும் ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டவைகளே யன்றி என்னுடையவைகள் அல்ல. என்கிறார் மாதீசன். கடைசிக் கவி மனப்பாடம் செய்து, பாடிப்பாடி மகிழ்வதற்கேற்ற ஒரு சிறந்த கவி. சிறகு தட்டி உயரப்பறந்து செல்லுவதற்கு உதவும் ஒரு கவி.
O Cross
that liftest up my head,
I dare not
ask to fly from Thee;
I lay in
dust life's glory dead
And from
the ground there blossoms red
Life that
shall endless be.
0 Comments