இந்நேரம் வந்தேதையா? என்னையா சுவாமி இந்நேரம் வந்தேதையா
மந்தையைத் தேவரீர் தேடச் - சம்மனசோர்கள்
மங்கள ராகமே பாட,
கந்தைத் துணியால் மூடக் கணங்கள் வெரவியோட
இந்தப் பாவியைத் தேட - இரக்கக் கண்ணீ ரோட - மந்
ஆசிரியர் ஆசிரியர் குறிப்பு:
இவர் நல்லுபிள்ளை வடக்கண்குளம். 1690இல்
தென் திருவாங்கூர் வண்டிக்காரன் புதூர் சிவன் கோயில் பூசாரி நரசிங்கமூர்த்தியா
பிள்ளை இந்து சன்னியாசிபோல் வந்த சேசு சங்க ஐரோப்பிய போதகரால் கிறிஸ்துவரானார். இவரின்
இரண்டாவது மகன் நல்லுபிள்ளையின் பாடலிது 13.1.1952இல் துப்பாக்கியால் சுடப்பட்டு
இரத்தசாட்சியால் மரித்த தேவசகாயம் உடலை கோட்டாற்று ஆலயத்தில் அடக்கம் செய்த
வாலிபரிவர். பிள்ளைகள் 21 பேர்க்கும் மரிய என தொடங்கும் பெயரிட்டார். 1807இல்
முதிர்வயதில் மரித்தார். பல கீர்த்தனைகளைப் படைத்த துரைவீட்டு மரியதாசு பிள்ளை
வடக்கண்குளம் இவரின் மகனே!
பாடற்குறிப்பு:
இந்நேரம் காலம் நிறைவேறிய (மாற் 1:15) தால் வந்தீர்
(ஏது) என்னை காரணம் (ஐயா) தலைவா (என்) என்னுடைய (ஐயர் தந்தையே (சுவாமி) இயேசுவே.
1ஆம் சரணத்தில், (மந்தை ஆட்டை -
பாவிகளை தேட (லூக் 15:6) (சம்மனசேரி) தூதர் பாட லூக் 2:14) கந்தையில்
குழந்தையிருப்பதைக் கண்டு (கணங்கள்) பூதங்கள் - பிசாசு வெரவி) பயந்து ஓட (இரக்கம்)
மனமுருகி கண்ணீர் ஓட) குழந்தை அழுதவாறு இந்நேரம் வந்ததேன் எனப் பாடுகிறார்?
0 Comments